திருச்சியில் 2ம் வகுப்பு மாணவியும் தன்னார்வலரும் கொடியேற்றி குடியரசு தின கொண்டாட்டம்

திருச்சியில் 2ம் வகுப்பு மாணவியும் தன்னார்வலரும் கொடியேற்றி குடியரசு தின கொண்டாட்டம்

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நாட்டின் 73வது குடியரசு தின விழா அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் பள்ளியில் *இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி தக்ஷனா அவர்களும், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் குழந்தைவேல்* அவர்களும் இணைந்து தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தனர்.

 வருகை தந்த அனைவருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபிரியா பிளாஸ்டிக் காலம் என்ற புத்தகமும்,  விதை பென்சில்களும் வழங்கப்பட்டன.விழா நிறைவில் வருகை புரிந்த அனைவருக்கும் அறுசுவை சர்க்கரை பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் உமா, சகாயராணி, உஷாராணி, சித்ரா, ஹேமலதா, வில்சன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn