இந்து சமய அறநிலையத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியவர் கலைஞர்- அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

இந்து சமய அறநிலையத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியவர் கலைஞர்- அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முற்போக்கு கழகத்தின் சார்பாக திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மணப்பாறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் அமைச்சர் பேசுகையில்...... திமுக கழகத்தின் சார்பாக நடைபெறும் எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி, தெருமுனைப் பிரச்சாரமாக இருந்தாலும் சரி அது மக்களது நலத்திட்ட உதவிகளை சார்ந்தே நடைபெறும் என்று கூறினார். 1970 க்கு முன்னர் அறநிலையத்துறை என்று தனியாக ஒரு துறை இருந்ததில்லை என்றும் அது வேறொரு துறையோடு சேர்ந்து இருந்ததாகவும், கலைஞர் ஆட்சியில் அர்ச்சர்களுக்கு தனி அற நிலையத் துறை வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததாகவும்,

அத்துறைக்கு தனியாக அமைச்சர் செயல்படுகின்ற அளவிற்கு வளர்ந்ததாகவும் பெருமையுடன் கூறினார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூலமாக பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதாகவும் கூறினார். அர்ச்சகர்களுக்கு வழங்கும்நல திட்ட உதவிகளை நாம் ஒவ்வொருவரும் பெருமையுடன் எதிர் கொள்கிறோம் என்று கூறினார்.

வரவேற்புரை பொருளாளர் குணசேகரன் ஆற்றினார். ஒன்றிய செயலாளர் ராமசாமி, பழனியாண்டி, செல்வராஜ், சின்ன அடைக்கன், ராஜேந்திரன், ஸ்ரீரங்கன், ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி, குணசீலன், நகரத்தலைவர் மு.ம செல்வம்,

மாவட்ட சுற்று சூழல் அணி அமைப்பாளர் கிருஷ்ண கோபால், மாவட்ட கழக நிர்வாகிகள் சபியுல்லா, சேகரன் வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, செங்குட்டுவன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn