திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண். 40, 41 மற்றும் 42 ஆகிய வார்டுகளுக்கு “மக்களுடன் முதல்வர்“ சிறப்பு முகாம்மை இன்று (04.01.2024) மேயர் மு. அன்பழகன், மண்டல தலைவர் திரு.மு. மதிவாணன் ஆகியேர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
“மக்களுடன் முதல்வர்“ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை,
மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.40,41, மற்றும் 42 ஆகிய வார்டுகளுக்கு பாரத் மஹால் சக்தி நகரில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்“ சிறப்பு முகாமை மேயர் மு. அன்பழகன், மண்டல தலைவர் மு.மதிவாணன், உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்ற மேயர் தெரிவித்தார்.
“மக்களுடன் முதல்வர்“ சிறப்பு முகாம்கள் நளை (05.01.2024)ம் தேதி மண்டலம் 4 , வார்டு எண் 57, 58மற்றும் 62 மற்றும் ஆகிய வார்டுகளுக்கு தம்பி அப்பா திருமண மண்டபம் எடைமலைப்பட்டி புதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் மண்டலம் 5, வார்டு 28, 29 ஆகிய ஜாகிர் உசேன் பார்க் மைதானம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இதே போன்று திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி, துணைத்தலைவி செல்வி விஜயகுமார் குத்துவிளக்கு ஏற்றினர்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஐநூற்றி ஐம்பது மனுக்களில் நானூற்றி பத்து மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் நிகழ்ச்சியில் தொழிலதிபரும் தேமுதிக மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளருமான வி.பி.தங்கமணி, திமுக பிரதிநிதி மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision