துக்க காரியத்திற்கு சென்று வந்தவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து
திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட குடமுருட்டி சோதனை சாவடி 7 அருகில் உள்ள குடமுருட்டி பாலத்தில் இன்று திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது அய்யாளம்மன் படித்துறை பகுதியில்
அருள்ராஜ் என்பவர் இறந்த துக்க காரியத்திற்கு சென்று விட்டு திரும்பி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மேல சிந்தாமணி நாடார் தெருவைச் சேர்ந்த ராமு (27), அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
தலையில் பலத்க காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision