செய்தியாளர்கள் மீது தாக்குதல் - திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் - திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் கண்டனம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகாம்பூர் கிராமத்தில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்பது குறித்து கடந்த 17ம் தேதி பிரத்தியேக செய்தி எடுத்த திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் பணியாற்றி வரும் இரு தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் (தீனா -நியூஸ் தமிழ், வினோத் - தந்தி) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். 

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் செய்தியாளர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். செல்போன்களை உடைத்தும், மற்றொரு செய்தியாளரின் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பார் உரிமையாளர் சிங்காரம், பாலகிருஷ்ணன், பிரவீன் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாலுகா செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ததற்கு திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து போலி மது பாட்டில்களை 24 மணி நேரமும் விற்பனை செய்வதோடு அரசு உத்தரவை மீறி மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் மது கூடங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சங்கம் வலியுறுத்துகிறது

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision