வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம் சிறப்பு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வாழ்வை வளமாக்கும் வாசிப்பு பழக்கம் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார்.
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் சுபேர் முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் பேசுகையில்.... பள்ளி மாணவர்கள் அன்றாடம் கல்வி நூல்களுடன் பல நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். அண்மைக் காலமாக, புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன.
அறிவியல் வளா்ச்சியால் அச்சுத்துறையில் இருந்து மின்னணு ஊடகம், இணையவழித் தோற்றங்களும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை குறைத்து வருகின்றன. உடலுக்கு உடற்பயிற்சி போலவே புத்தக வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும். புத்தகங்கள் வாயிலாக ஒருவா் பெறும் அறிவு அவரை பிறருடன் திறம்பட உரையாடச் செய்வதுடன், சமுதாயத்தில் அவருடைய நிலையை உயா்த்தவும் செய்கிறது. வாசிப்பு நம் அறிவுக்கு வளமூட்டுகிறது. நல்ல புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மனம் புத்துணா்வு அடையும்.
மனிதா்களுக்கு மன அழுத்தம் கூடியுள்ள இன்றைய காலகட்டத்தில், பொது அறிவினை வழங்கும் பொழுதுபோக்கு நூல்களை வாசிப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கும் என பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் குறித்த புத்தகங்களை வழங்கி புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தால், நம் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன், நினைவாற்றல் திறனும் அதிகரிக்கும் என்றார். பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய நாணயங்கள், பணத்தாள்கள் குறித்த புத்தகத்தை ஆா்வத்துடன் படித்தனர். பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision