அடைக்கல அன்னையின் திருத்தேர் பவனி - திரளான பக்தர்கள் வழிபாடு

அடைக்கல அன்னையின் திருத்தேர் பவனி - திரளான பக்தர்கள் வழிபாடு

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இருக்கும் அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய ஆண்டு திருவிழா கடந்த 15 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் இரவு 7 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை நற்கருணை பவனியும் அதனைத் தொடர்ந்து இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி (சனிக்கிழமை) மாலை 06:00 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு வான வேடிக்கை மற்றும் மின்விளக்கு அலங்காரத்துடன் அடைக்கல அன்னையின் திருத்தேர் பவனி நடைபெற்றது.

இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டு சென்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision