பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் முதியவரை வெட்டிய வாலிபர்

பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் முதியவரை வெட்டிய வாலிபர்

திருச்சி திருவானைக்காவல் 5ம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். சமையல் தொழிலாளியான இவர் நேற்று இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்தபோது அங்கு வந்த 4 பேர் காஜாமைதீனிடம் இருந்த பையையும், ரூ.1,400-ஐயும் பறித்து சென்றனர்.

இதையடுத்து காஜா மைதீன் அதில் இரண்டு நபர்களை பிடித்து சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றார். அப்போது அவரை, பின் தொடர்ந்து வந்த அபிஷேக் என்ற வாலிபர் தடுத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்கச்சென்ற போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ராஜா, பிரேம் ஆனந்த் ஆகியோரையும் அபிஷேக் அரிவாளால் தாக்கினார். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து சாலையில் சென்றவர்களையும் அபிஷேக் அரிவாளால் தாக்கியுள்ளார். சுதாகரித்துக்கொண்ட சிறப்பு துணை ஆய்வாளர் ராஜா, அபிஷேக்கிடம் இருந்து அரிவாளை பறித்தார். அப்போது அங்கு வந்த சிறப்பு துணை ஆய்வாளர் சந்தானம், அபிஷேக்கை மடக்கி பிடித்தார். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அபிஷேக்கை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பலத்த காயமடைந்த காஜாமைதீன், அபிஷேக் ஆகியோரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் அபிஷேக்குடன் வந்த திருச்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குரு (20), காந்தி மார்க்கெட் பாலக்கரையை சேர்ந்த தவ்பிக் (19) மற்றும் அரியமங்கலம் பகுதி சேர்ந்த அபுபக்கர் சித்திக் (19) உடன் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம குறித்து கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக கூடும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision