கட்டிட வரைபடம் தயாரித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்

கட்டிட வரைபடம் தயாரித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிப்பகுதிகளில் அமைக்கப்படும் கட்டிடங்கள், மனைபிரிவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான வரைபட அனுமதியினை இணையவழியில் விண்ணப்பித்து, பொதுமக்கள் எளிதில் பெற ஒற்றைச்சாளர முறையில் வழங்குவதற்கு தமிழக அரசால் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனுபவம் வாய்ந்த கட்டிட பொறியாளர்கள் / தொழில்முறை வல்லுநர்கள் தாங்கள் வசிக்கும ; ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு Auto Cadd மூலம் வரைபடம் தயார் செய்து கொடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கிட ஏதுவாக பின்வரும் விபரப்படியான தகுதி வாய்ந்த பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. கட்டிட வடிவமைப்பாளர்கள் - (Architects).

2. பொறியாளர்கள் - (Engineers).

3. கட்டமைப்பு பொறியாளர்கள் (Construction Engineers).

4. கட்டிட அபிவிருத்தியாளர்கள் (Construction Engineers)

5. தரத்தணிக்கையாளர்கள் (Quality Auditors)

6. நகரமைப்பு வல்லுநர்கள் (Town Planer)

7. அபிவிருத்தியாளர்கள் (Developers)

மேற்படி பொறியாளர்கள் தங்களின் கல்வி தகுதி சான்றிதழ் நகல், ஆதார்கார்டு நகல் மற்றும் இதர தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு (24.11.2023) ஆம் தேதிக்குள் adptry@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், நேரிடையாகவும் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

நிபந்தனைகள் :-

1. இந்த அங்கீகாரம் முற்றிலும் தற்காலிகமானது.

2. விண்ணப்பத்தினை ஏற்பது / நிராகரிப்பது மற்றும் அனுமதி வழங்குவது மாவட்ட ஆட்சியரின் இறுதி முடிவாகும் என்றுக்ஷ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision