தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தய விழா

தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தய விழா

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவில் திமுகவினர் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திருச்சி அரைவட்ட சாலை பழங்கனாங்குடியில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது.

இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியை தொடங்கி வைத்துவெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்

பெரிய மாட்டு எல்லை பந்தயத்தில் 8 மயில் தூரத்திற்கு 13 மாடுகள் ஓடியது. இதில் முதல் இடத்தை திருச்சி வெள்ளம் தாங்கி அம்மன் வண்டியும், இரண்டாவது இடத்தை தஞ்சை கூட நாணல் குளத்தாலம்மன்,  மூன்றாவது இடத்தை தேவகோட்டை வெள்ளி முத்து வாகினி பைனான்ஸ்,  4வது இடத்தை கிளியூர் ஜீவா மாட்டுவண்டியும் பெற்றது.

அவர்களுக்கு முறையே முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2வது பரிசு ரூ.40 ஆயிரம், 3வது பரிசு 30 ஆயிரம், 4வது 10 ஆயிரம் ஆகும். அதேபோல் சிறிய மாடுகளுக்கான 6 மைல் தூர பந்தயத்திற்கு 18 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டது.

முதல் பரிசை திருச்சி வெல்லம் தாங்கி அம்மன், 2வது வரிசை மூக்குடி, 3வது பரிசு, கிளியூர் வெளிமுத்து வாகினி, 4வது பரிசு அல்லூர் சர்வீஸ் ஆகியோர் பரிசுகளை வென்றனர்

இவற்றிற்கான முதல் பரிசு ரூ.30 ஆயிரம், 2வது பரிசு ரூ.20 ஆயிரம், 3வது பரிசு பத்தாயிரம், 4வது பரிசு ரூ.5ஆயிரம். பெரிய குதிரை 10 மயில் தூரத்திற்கான போட்டி முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2வது பரிசு 20 ஆயிரம் 3வது பரிசு ரூ.15 ஆயிரம், 4வது பரிசு ரூ.7 ஆயிரம், சிறிய குதிரை 8 மைல் முதல் பரிசு ரூ. 20 ஆயிரம், 2வது பரிசு ரூ. 15ஆயிரம், 3வது பரிசு ரூ.10 ஆயிரம், 4வது பரிசு ரூ.5000 பரிசுகள் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn