திருச்சியில் மஞ்சள் காமாலை பரவல் பீதி - ஆணையர் தகவல்

திருச்சியில் மஞ்சள் காமாலை பரவல் பீதி - ஆணையர் தகவல்

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று அதிகரித்து வருவதாக வாட்ஸ்அப்-பில் தகவல் பரவி வருகிறது. அந்த பதிவில்.... திருச்சி பகுதியில் உள்ள நண்பர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் குடிநீரை எல்லோரும் சூடு பண்ணி குடிக்க வேண்டும் 52வது வார்டு கொட்டை கொள்ளை தெரு, பீமநகர், மாசிங்பேட்டை,

கூலி பஜார், கொசத்தெரு, ஆழ்வார்தோப்பு, கண்டித்தெரு மற்றும் சுற்றுவட்டார  பகுதியிலும் மஞ்சள் காமாலை பரவி வருகின்றன. இதனால் உங்கள் குடும்பத்தினரையும், பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை மொத்தம் 150 பேருக்கு மஞ்சகாமாலை தொற்று வந்திருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2 மற்றும் 3 வார்டு எண் -16 மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி, கலைஞர் நகர் பகுதி குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் கடந்த 18ம் தேதி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் வீடுகளில் நேரில் சென்று குடிநீரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயர் மு.அன்பழகன் உறுதியளித்தார்.

இந்த நிலையில் தற்போது மாநகரில் பொதுகுடிநீரால் மஞ்சள் காமாலை தொற்று அதிகரித்து வருவதாக தகவல் பரவி வருவது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கேட்ட பொழுது..... திருச்சி மாநகரில் விநியோகிக்கப்படும் குடிநீரால் உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுக்கு இதுகுறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் குடிநீரில் தொற்று நோய் ஏற்படா வண்ணம் இருக்க குளோரின் பவுடர் கலக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது குளோரின் தண்ணி ஊட்டப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் மாநகராட்சியால் விநியோக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக குற்றச்சாட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் அடிப்படையில் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். இதுமட்டுமின்றி கலங்கலாக குடிநீர் வருவதாக புகார் வரும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த குடிநீரால் மஞ்சகாமாலை ஏற்படுவதற்கான தொற்றுகள் இல்லை என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision