திருச்சியில் 3000 லிட்டர் பாட்டில் குளிர்பானங்கள் பறிமுதல்
கடந்த இரண்டு நாட்களாக உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வின்போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கண்ணாடி குளிர்பான பாட்டில்களில் அழியும் மையினால் அச்சிடபட்டிருந்ததை அடுத்து திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள காளி குளிர்பான தயாரிப்பு நிறுவனம் நேற்று (25.02.2022) திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் Dr. R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்தனர்.
சுமார் 3000 லிட்டர் Bovonto மற்றும் Sunmango குளிர்பானங்கள் எளிதில் அழிக்கக்கூடிய மையினால் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்து பிணை பத்திரம் போடப்பட்டு ஒரு அறையில் சீல் செய்யப்பட்டு பிரிவு 55-இன் கீழ் ஒரு வார காலத்திற்குள் இனி தயாரிக்கும் குளிர்பானங்கள் அனைத்தும் அழியாத மையினால் அச்சிட பட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் இதுபோன்று குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அழியாத மையினால் அச்சிட வேண்டும் என்றும் உணவு வணிகர்களும் பொதுமக்களும் இதுபோன்ற குளிர்பானங்களில் தயாரிப்பு தேதி இல்லாமல் கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், ஸ்டாலின், வசந்தன், ஜஸ்டின் மற்றும் இப்ராஹிம் உடனிருந்தனார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn