திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில், இன்று காலை 11 மணியளவில் திருச்சி மாநகர மாவட்ட பொருளாளர் முரளி தலைமையில் ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் முன்னிலையில்
பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1350ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி கண்டோன்மெண்ட் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் பூக்கடை பன்னீர் கோட்டத் தலைவர்கள்
வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல் ராய், அழகர், கனகராஜ், எட்வின், சிறுபான்மை பிரிவு தலைவர் பஜார் மைதீன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஹரி பிரசாத், கிஷோர் குமார், வார்டு தலைவர்கள் அனந்த பத்மநாபன், கண்ணன், பாண்டியன், மற்றும் ரீகன், எழில், இர்ஃபான், சசி, அஜய், ஜிம் விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision