இந்திய பணத்தாள்களில் இடம் பெற்றுள்ள மொழிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து இந்திய பணத்தாள்களில் இடம் பெற்றுள்ள மொழிகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது.
கிளை நூலகர் நாகராஜன் தலைமை வகித்தார். இந்திய பணத்தாள்களில் இடம் பெற்றுள்ள மொழிகள் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்.... பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.
அப்படி நாம் பயன்படுத்தும் இந்திய பணத்தாளில் மொத்தம் 17 மொழிகள் அச்சிடப்பட்டுள்ளன. நம் இந்திய பணத்தாள்களில் இத்தனை மொழிகள் இருக்கின்றன என்ற கேள்வி அனைவருக்கும் வரும். அதற்கு காரணம் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் படி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் என்பதால் தான் இம்மொழிகள் இந்திய பணத்தாள்களில் இடம் பெற்றுள்ளன.
இந்திய ரூபாய் பணத்தாள்களின் ஒரு பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டும் பொதுவாக இருக்கும். மற்றொரு பக்கத்தில் 15 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அவை அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீர், கொங்கனி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது இடம் பெற்றுள்ளன என்றார்.
நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், மன்சூர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, சந்திரசேகரன் நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision