தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் திருச்சி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஞ்சபூரில் தொடங்கப்பட்ட முதல் சூரியமின் உற்பத்தி பூங்காவின் பணிகள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஒப்புதல் பெறாததால் தற்போது அங்கு மின்சார உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.50 கோடி மதிப்பீட்டில் இந்த சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.
2019 டிசம்பர் தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தும் 2020 டிசம்பர் மாதம் நிறைவடைந்தன. சுமார் 7600 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட 2.4 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஆகும். சூரிய மின்சக்தி பூங்காவிற்கு 2 கிலோ மீட்டர் நீளம் உள்ள துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கிட மின்பரிமாற்றக் கம்பிகள் வரை நிறுவப்பட்டுவிட்டன. ஜனவரி 2021இல் மின்சாரம் தயாரிக்க இங்கே வசதி இருந்தபோதிலும் மின்சக்தி நிலையத்தில் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றது.
அதேநேரத்தில்மாநகராட்சி நிறுவனம் பராமரிப்புக்காக பணம் செலவழித்துக் கொண்டிருக்கிறது பேனல்களில் குவிந்துள்ள அழுக்கை சுத்தம் செய்யும் நோக்கத்திற்காக அந்த இடத்தில் நான்கு போர்வெல்கள் போடப்பட்டுள்ளன. 13 ஏக்கரில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்களின் துணை மின்நிலையங்களுக்கு நேரடியாக வழங்கப்படும். கொரானா காலகட்டம் என்பதால் ஒப்புதல் பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்தத் தாமதத்தால் சூரிய மின்சக்தி பூங்காவிற்கு அருகிலேயே இரண்டாம் கட்டமாக 2.7 மெகாவாட் விரிவாக்க ஆலைகளுக்கு சுமார் 26 ஏக்கர் நிலத்தில் தொடங்கவுள்ள திட்டங்களும் தாமதப்படுத்தப்படுகிறது.
பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில், ஓராண்டுக்கு 3,994.56 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனால், மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.2.23 கோடி சேமிக்கப்படும். தயார் நிலையில் இருக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி செய்ய திருச்சி மாநகராட்சி தயாராக உள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒப்புதல் கிடைப்பது மட்டுமே தாமதமாகிறது ஒப்புதல் கிடைத்த பின்பு உடனடியாக மின்சார உற்பத்தியை தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve