சீன எல்லையில் விபத்தில் பலியான திருச்சி ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சீன எல்லையில் விபத்தில் பலியான திருச்சி ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் - ராஜம்மாள் தம்பதியின் மகன் தேவ் ஆனந்த் (25). ராணுவ வீரரான இவர் சீன எல்லையில்  பாதுகாப்பு பணியில் இருந்தார். கடந்த 30-ஆம் தேதி பணியை முடித்துவிட்டு ராணுவ டிரக்கில் 6 பேருடன் முகாமிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென டிரக் வாகனம் தடம்புரண்டு மலையிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இந்த விபத்தில் சிக்கிய 2 ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத்தகவலை ராணுவ அதிகாரி தேவ் ஆனந்த் குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர். இதனையடுத்து தேவ் ஆனந்த்  உடல் விமானம் மூலம் நேற்று மாலை பெங்களூர் வந்தது.

அதனை தொடர்ந்து லால்குடி அருகே திண்ணிய மணக்கொல்லையில் ராணுவ வீரர் தேவ் ஆனந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தியது பின்னர் முழு ராணுவ அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படது. ராணுவ வீரர்கள் இறந்த செய்தி அறிந்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP