கட்டுமான இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கட்டுமான இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. குறிப்பாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள கட்டுக் கம்பிகள் சென்ட்ரிங் கம்பிகள் மற்றும் இரும்பு தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை நோட்டமிட்டு திருடி செல்வதாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே பாலாஜி நகர் 17வது கிராசில் கட்டிட கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூடாரத்திலிருந்து சென்ட்ரிங் கம்பிகள், கட்டுக் கம்பிகள், இரும்பு தளவாட பொருட்கள் ஆகியவற்றை சாக்கு மூட்டையில் பேக்கிங் செய்து அதனை டூவீலரில் திருடிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி கட்சியானது அப்பகுதி இணையத்தில் வைரலானது. மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை தேடிவந்த நிலையில், இதேபோல் சந்தோஷ் நகரில் உள்ள கட்டுமான பணிகள் நடைபெறும் தற்காலிக கட்டிடத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து பொருட்களை திருடி செல்வது போன்ற மற்றொரு சிசிடிவி காட்சியானது வெளியானது.

கடந்த சில நாட்களில் மட்டும் இப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை நோட்டமிட்டு ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தொடர் திருட்டில் ஈடுபடும் மர்மநபரை சிசிடிவி காட்சிகளை வைத்து திருவெறும்பூர் போலீசார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருவெறும்பூர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பிகளை திருடிய அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் ( 27 ) என்பவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில் பல இடங்களில் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகளை திருடியதை ஒத்துக் கொண்டான். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விஜயை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision