பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா - முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார். 1996ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், திருச்சி நகரில் இவரது சிலை நிறுவப்பட்டது. பிறகு 2002ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று மன்னர் பேரரசு பெரும்பிடுக முத்திரையர் 1349பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், வீரமுத்தரையர் சங்கத்தின் செல்வகுமார் மற்றும் கட்சியினர் பெரும்பிடுது முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்..... அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டரணி உரிமை மீட்பு குழுவின் சார்பாக பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் அஞ்சலியை செலுத்தி உள்ளோம். மன்னர்கள் அவர் வழி வந்தவர்கள் எப்படி நடக்க வேண்டும், மக்கள் நலம் நாடுகின்றவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என தமிழகத்தில் எடுத்துக்காட்டாக எப்படி விளங்கினார் என்பது தான் வரலாறு. அவரது வழியை பின்பற்றினால் தமிழகம் பெரும் பரிமாண வளர்ச்சி பெரும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இந்த நிகழ்வில் மற்ற கேள்விகள் வேண்டாம் இது அதற்குரிய இடம் இல்லை எனக் கூறி அங்கிருந்து கடந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision