போதையில்லா பாரதம் குறித்து திருச்சியில் விழிப்புணர்வு!

போதையில்லா பாரதம் குறித்து திருச்சியில் விழிப்புணர்வு!

தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு இல்லங்களில் பயிலும் மாணவர்கள், லாரி, ஆட்டோ வாகன ஓட்டுநர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட இலக்கு மக்கள் மத்தியில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள உயர்மட்ட அலுவலர் களுக்கும் போதை குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் இவர்களோடு இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று திருநங்கைகள், ஆட்டோ, லாரி வாகன ஓட்டுநர் மத்தியில் சிறுவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மண்ணச்ச நல்லூர் திருநங்கை நாகமணி தலைமையில் திருநங்கைகள் மத்தியிலும், பிடிஐ தொண்டுநிறுவன ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமையில் வாகன ஓட்டுநர்கள் மத்தியிலும், பூலோகநாதன் கோவில் நகரில் உள்ள மகளிர் குழுக்கள் மத்தியில் கண்ணன் தலைமையிலும் ஜோதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி அ.பழனியாபிள்ளை சிறப்புரையாற்றினார். 

வரும் ஜுன் மாதம் 26ஆம் நாள் உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தி, அவர்களுக்கு பரிசுகள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision