திருச்சி முத்தரையர் சிலை அருகே விபத்து - மரியாதை செய்பவர்கள் அலம்பல் - பொதுமக்கள் புலம்பல்
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1349-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள திருஉருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் இருவரும் முதலாவதாக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அரசு சதய விழாவிற்க்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்ய ஒத்தக்கடை பகுதிக்கு வருவார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் தலைமையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவருவு சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறனர். இதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பல்வேறு கட்டுபாடுகள் விதித்துள்ளனர். ஆனாலும் இதனை மீறி அதிக வாகனங்களில் அதிக சப்ததுடன் பேரணியாக வருகின்றனர். இதனால் அந்த சாலையில் வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருப்பினும் கார் சேதமடைந்துள்ளது இந்த முத்திரை சிறை சுற்றி பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் உள்ளதால் அதிகளவு பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதன் நலன் கருதியே போக்குவரத்து போலீசார் சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர். ஆனால் அதையும் மீறி இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டு பேரணியாக போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.