திருச்சியில் MKB's NEST பூமிபூஜை விழா

திருச்சியில் MKB's NEST பூமிபூஜை விழா

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் எம்கேபி ஹவுசிங் புரமோட்டர்ஸ் சார்பில் எம் கேபி நெஸ்ட் புதிய அடுக்குமாடி வீடுகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருச்சி பாரத் ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் அதுல் பிரியதர்ஷி, மண்டல மேலாளர் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து நிறுவன பங்குதாரர் ஷாஜகான் கூறுகையில்.... 22 ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் 3 சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். திருச்சியின் முக்கிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகளை கட்டி இருக்கிறோம். புதிதாக கட்டப்பட உள்ள எம்கேபி நெஸ்ட், தரைதளம் மற்றும் 5 தளங்களில் 30 வீடுகள், 2 மற்றும் படுக்கை அறை வசதி உள்ளது.

லிப்ட், கார் பார்க்கிங், குழந்தைகள் விளையாடும் இடம் ஜிம், உள்விளையாட்டு அறை, ரூப் டாப்பில் யோகா மற்றும் தியானம் செய்யும் வசதி உள்ளது. வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் வசதி பெறலாம். சிறப்பு சலுகையாக வீடு முன்பதிவு செய்யும் முதல் 5 நபர்களுக்கு ரூ. 6 ஆயிரத்து 500 விலையுள்ள சதுர அடி ரூ. 6 ஆயிரத்து 300க்கு வழங்குகிறோம், என்றார்.

நிர்வாக பங்குதாரர் சையது இம்ரான் நன்றி கூறினார். ஐஓபி வங்கி முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம், திருச்சி கிரடாய் தலைவர் மனோகரன், சேர்மன் ரவி, செயலாளர் இளமுருகன், பொருளாளர் முருகானந்தம், விக்னேஷ் குழும தலைவர் கோபிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision