அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் - காத்திருப்பு போராட்டம்
திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கல்மந்தை ஊர் பொதுமக்களும் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (08.05.2023) காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கல்மந்தை காலனி கிளை செயலாளர் மகாலிங்கம் தலைமை வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆர்.ராஜா, மலைக்கோட்டை பகுதி செயலாளர் பா.லெனின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ரங்கராஜன், வெற்றிச்செல்வன், கார்த்திக் மற்றும் பகுதி செயலாளர்கள் ரபீக், விஜயேந்திரன் CITU நிர்வாகிகள் சிவகுமார், மணிமாறன், இளையராஜா,
வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்ட களத்திற்கு கிழக்கு தாசில்தார் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக வருகின்ற (11.5.2023) அன்று கிழக்கு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்ற பொதுமக்களிடம் அறிவித்தனர். இதனையொட்டி காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn