திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500லிருந்து 3000 உயர்த்தி தர வேண்டும், தமிழக அரசின் துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும்
ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றோர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாகவும் மேலும் ஒருவார காலமாக சென்னையில் ஆப்பாட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வரும் பார்வையற்ற மாற்றுதிறனாளிகளை முதல்வர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரி திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களில் கூட்டுக் குழு சார்பாக திருச்சி தெப்பகுளம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்
இந்த ஆப்பாட்டத்தில் கலந்து கொண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திருச்சி தெப்பக்குளம் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision