ஊரடங்கு விதிமுறையை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை. மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு 20.04.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை ஞாயிறுகிழமை (25.04.2021) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி மேற்கண்ட அரசாணையை அமல்படுத்த திருச்சி மாநகரில் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமையில் அனைத்து காவல் நிலையங்களிலும் மொத்தம் 22 இடங்களில் ஒரு கூடுதல் துணை ஆணையர், 2 உதவி ஆணையர், 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 400-க்கு மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
முழு ஊரடங்கு சிறப்பு வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுப்படுத்தப்பட உள்ளது. அரசு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அனுமதியின்றி சுற்றித்திரியும் நபர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அரசாணையில் குறிப்பிட்டது போல் பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை மையம், மருந்தகங்கள், மருத்துவ அவசர உதவி வாகனம், சரக்கு வாகனங்கள், விவசாய விளைப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்கள் இயங்க தடையில்லை.
மேலும் வழக்கம் போல் இரவு ரோந்து பணியில் உதவி ஆணையர் தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் மாநகரின் நுழைவு பகுதிகளில் உள்ள 8 சோதனைச்சாவடிகள், 14 ரோந்து வாகனங்கள் மற்றும் 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுப்பப்படுத்தப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணைளயர் கேட்டுக்கொள்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu