திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 19.03.2022 நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பட்டமளிப்பு விழா துவங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஆ. செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைத்தந்து சிறப்பித்தார். இவ்விழாவில்; புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட் அவர்கள் வரவேற்புரை வழங்கியதுடன், கல்லூரியின் 2020-2021-ஆம் ஆண்டின் சிறப்பு நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் முனைவர் ஆ. செல்வம் அவர்கள் தனது சிறப்புரையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் பெறப்பட்ட மதிப்பெண்களை (3.75ஃ4) குறித்துப் பேசும் போது சதவீகித அடிப்படையில் நம் கல்லூரி பெற்றிருப்பது 93.75மூ எனப் பாராட்டி பேசினார். மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளுக்குத் தங்களைச் சிறந்தமுறையில் தயார் செய்ய பல்வேறு நூல்களை வாசிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் மற்றும் பல்வேறு புலமைகளைப் பெற்றுச் சிறந்து விளங்கி கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாகத் திகழவேண்டும் என்று பாராட்டி சிறப்புரை நல்கினார்.
எம் புனித சிலுவை கல்லூரியில் 20 துறைகளிலிருந்து மொத்தம் 1906 மாணவ மாணவிகளுக்கு (1551 இளநிலை பட்டப்படிப்பு, 289 முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் 66 ஆய்வியல் நிறைஞர்) பட்டம் பெற தகுதிப்பெற்றனர்.
கல்லூரியின் முதல் தரவரிசையில் 29 இளநிலை மாணவிகளும், 21 முதுநிலை மாணவிகளும் மதிப்பெண் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர். பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் 15 மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பிலும் 14 மாணவிகள் முதுநிலை பட்டப்படிப்பிலும் பதக்கத்தினைப் பெற்றனர். இவ்விழாவானது நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...