திருச்சி ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்

திருச்சி ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள அன்பில் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் பங்கேற்க திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 626 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.

கால்நடை பராமரிப்புத் துறையின் மருத்துவக் குழுவினர் நடத்திய சோதனையின்போது ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, 625 காளைகள் களமிறங்க அனுமதிக்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, களத்தில் இருந்த 321 வீரர்கள் அடக்க முயற்சித்தனர். அப்போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர், காளையின் உரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 3 பேர் என 20 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மற்றும் அன்பில் கிராமத்து நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO