தமிழக பட்ஜெட் திட்டங்கள் யானை பசிக்கு சோளப்பொறி திருச்சியில் ஜெயக்குமார் பேட்டி
ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட எண்ணற்ற திட்டங்கள் குறிப்பாக சத்துணவு திட்டம், விவசாயிகள் எல்லா பயன்களும் பெற ஒருங்கிணைந்த திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பால்வளம், மீன்வளம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பட்ஜெட்டை மொத்தமாக வேளான் பட்ஜெட் என கூறி விவசாயிகளை ஏமாற்றும் வேலையை செய்கிறது. விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் இந்த வேளாண் பட்ஜெட்.
ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் சமூக நீதி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. திமுக சமூக நீதிக்கு மாறாக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார். ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் தாலிக்கு தங்கம் திட்டம், திருமண நிதி உதவி திட்டம் ஆகியவை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
அதை ஆனால் சமூக நீதி என பேசும் தி.மு.க அரசு இந்த திட்டங்களுக்கு மூடுவிழா கண்டுள்ளது. அதற்கு பதிலாக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்கள் அதை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றி விட்டார்கள். மக்கள் இதை உணர்ந்து தேர்தல் காலத்தில் உரிய முடிவெடுப்பார்கள். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு இருபத்தி எட்டு ஆயிரம் கோடி தமிழக அரசு வழங்கியுள்ள நிலையில்
விவசாயிகள் இலவச மின்சாரம் ரத்தாகும் என்ற அச்சத்தில் உள்ளனர். குறித்த கேள்விக்கு... உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பஸ் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றை உயர்த்தி ஸ்டாலின் பல பரிசுகள் வழங்க உள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ்க்கு சம்மன் அனுப்பி உள்ளார்கள் அதில் ஆஜராவது குறித்து அவர் முடிவெடுப்பார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO