திருச்சியில் பீதியை கிளப்பும் வட இந்திய கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளை திட்டம் - சிசிடிவி காட்சிகள் வைரல்

திருச்சியில் பீதியை கிளப்பும் வட இந்திய கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளை திட்டம் - சிசிடிவி காட்சிகள் வைரல்

திருச்சி கருமண்டபத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் அதிகமாக வருகிறது.குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.09.202) அன்று ஒரு வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை போனது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஒட்டுமொத்தமாக கருமண்டம் ஏரியாவே வட இந்தியர்கள் பிடியில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பகல் நேரங்களில் இருவர் தெருக்களில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு பார்த்து எந்த வீட்டில் கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர். மேலும் அந்த வீடுகளில் யாரும் ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் யாரும் இல்லை என்றாலும் பூட்டி வைத்திருந்தாலும் அதனை பார்த்துவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்கான தயாராகின்றனர். கருமண்டபத்தை பொறுத்த அளவு தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக பூட்டிய வீட்டிலுள்ள நகைகள் கொள்ளை போன சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது .

தற்பொழுது அங்கு வசிக்கும்  மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவே குறிப்பிடுகின்றனர். வட இந்திய கொள்ளையர்களை உடனடியாக கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  வட இந்திய கொள்ளையர்கள் பகல் நேரங்களில் பூட்டிருக்கும் வீடுகளுக்கு அருகில் சிறுநீர் கழிப்பது போல் நின்று பின்பு சுவர் ஏறி குதித்து வீட்டில் கொள்ளை அடிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

பகலிலும் இரவிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் .மேலும் தெருக்களில் நடந்து சென்று வீடுகளை நோட்டமிடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ளது. அவர்களை பிடித்து உடனடியாக கொள்ளை போன பொருட்களை மீட்பது மட்டுமல்லாமல் அவர்களை கைது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என நகைகளை பறிகொடுத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO