அழியும் சிறுதானிய பயிர் வகைகளை மீட்டெடுக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர்

அழியும் சிறுதானிய பயிர் வகைகளை மீட்டெடுக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர்

இளைய சமுதாயம் விவசாயத்தை கையில் எடுத்தாலே விவசாயத்திற்கான அழிவை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு தன்னை அடையாள படுத்திக் கொண்டிருக்கிறார் பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சேர்ந்த நல்லப்பன். MCA பட்டதாரியான நல்லப்பன் இயற்கை விவசாயத்தை காக்க வேண்டும், அழியும் பாரம்பரிய பயிர்களின் மீட்டெடுக்க வேண்டும் சிறுதானியங்கள் சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என்று தன்னுடைய நோக்கத்திற்காக பெங்களூரில் பார்த்துக்கொண்டிருந்த கணினி பொறியாளர் பணியையும் விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துள்ளார்.

இயற்கை விவசாயத்தில் குறிப்பாக சிறு தானியங்கள்  விளைவித்தல் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை. ஊட்டச்சத்துகளும் மருத்துவ நற்குணங்களும் நிறைந்த சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, கொள்ளு, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். சிறுதானியங்கள் குறித்த சிறப்பான விழிப்புணர்வு இன்று கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் நம்மாழ்வார் தான்! நம்மாழ்வாரின் வழியில் சிறுதானியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக தொடங்கினேன். தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படும் சிறுதானிய வகைகள் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு, கம்பு, சோளம். பொதுவாக இவை அனைத்தும் அதிகம் மானவாரி பயிர் சாகுபடியில் விளைகிறது. பொதுவாக வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் இருக்கும் மழை அளவை கொண்டே இந்த இயற்கை முறை மானவாரி சாகுபடி செய்யபடுகிறது.

இதில் 90,000 ஹெக்டேர் அளவு நிலத்தில் கேழ்வரகு மட்டுமே தனியாக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தில், 2 சால் முதல் 4 சால் வரை புழுதி உழவு ஓட்டி நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். இந்தக் கோடைகால புழுதி உழவால், களைகள் கட்டுப்படுவதோடு, மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவை வெப்பத்தில் அழிக்கப்பட்டுவிடும். இந்த பூச்சிகளால் ஏற்படும் குலை நோய் மற்றும் பூச்சித்தாக்குதல், பூஞ்சணத் தாக்குதல் போன்றவை திக அளவில் கட்டுப்படுத்தப்படும். சித்திரையில் செய்யும் கோடை உழவுக்கு அடுத்துக் கிடைக்கும் மழையில், மழைநீர் மண்ணுக்குள் சேகரமாகி விடும். அதனால் சிறிய லல்வில் பெய்யும் மழையால் மண் ஈரப்பதத்துடன் இருக்கும். மானாவாரி நிலத்திற்கு என்ற மாதங்கள் – ஜூன் - ஜூலை அல்லது செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் சிறுதானியங்களை விதைக்கலாம். தினை மற்றும் கம்பு இரண்டுமே 90 நாள் வயதுப் பயிர்கள். வரகு, குதிரைவாலி மற்றும் சாமை ஆகிய பயிர்கள் 100 முதல் 110 நாட்கள் வயது கொண்டவை.

ஆனால், அனைத்துப் பயிர்களுக்கும் சாகுபடி முறை ஒன்றுதான். மூன்று ஏக்கரில் கரிம வேளாண் முறைகளைப் பயன்படுத்தி புரோசோ, சோளம் வகைகள், ஃபாக்ஸ்டைல், கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு வகையான வரகு வகைகளை பயிரிட்டேன். நான் விவசாயத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கவில்லை. எனது குறிக்கோள் சத்தான தானியங்களை ஊக்குவிப்பதோடு அனைவரையும் மீண்டும் இயற்கை வேளாண்மைக்கு கொண்டு வருவதாகும், “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டத்தில் வரகு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில், ரசாயனங்களைப் பயன்படுத்தி பணப்பயிர் சாகுபடிக்கு மாறினோம். இது மண்ணின் வளத்தை அழித்தது. எனவே மாவட்டத்தின் விளைபொருட்கள் இயற்கையானவை அல்ல, ஏனெனில் அதில் செயற்கை தலையீடு உள்ளது.

வரகு வளர்ப்பது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு கால்நடைகளுக்கு உணவளிக்கிறது. தினை வறட்சியை எதிர்க்கும் இந்த குணங்கள் இருப்பதைத் தவிர, இந்த தானியங்கள் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன, இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். "இதை வளர்க்க நாங்கள் எந்த விதையையோ அல்லது ரசாயன நிறுவனத்தையோ சார்ந்து இருக்க வேண்டியதில்லை". விவசாயத்தில் அதிக செலவீனம் இல்லாமல் அதிக மகசூல் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் நான் ஊட்டச்சத்து நிறைந்த நச்சுக் கலக்காத உணவினை உண்ண வேண்டும் என்ற நம்மாழ்வாரின் கொள்கையில் ஒவ்வொரு இளைஞர்களும் செயல்படவேண்டும். அத்தொடக்கம் என்னிலிருந்தே தொடங்கினேன்

தற்போது, ​​மாவட்டத்தில் பல விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முன்வந்துள்ளனர். 
சிறுவயதில்  என்னுடைய  வீட்டில் சிறு தானியங்களை உணவாக பயன்பட்டது. சிறுதானியங்களை எதிர்கால தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியாக தொடர்ந்துள்ளேன். ஆனால் தானியத்தை மாவாக மாற்றுவதற்கு இங்கு உள்கட்டமைப்பு இல்லை. எனவே, அவற்றை அரைப்பதற்காக மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அரசாங்கத்தால் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிந்தால், வரகு சாகுபடி அதிகரிக்கும், இது மக்கள் தங்கள் உணவில் முக்கிய உணவாக மாற்ற உதவும். இளைஞர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் அரசும் ஒத்துழைப்பு தருமானால் நம் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தின் மூலமும் நல்ல மகசூல் நஞ்சில்லா உணவை கொண்டு சேர்க்க முடியும் என்கிறார் இந்த இயற்கை விவசாயி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn