பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

கடந்த 2013ம் ஆண்டிக் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பிராஜாம் கிராமத்தினை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா என்கிற சரவணன் அவரது கூட்டாளிகள் மாரியப்பன், ஆறுமுகம், மனோகரன் மற்றும் செல்வம் ஆகியோர் சேர்ந்து கடந்த 8.06.2013 அன்று படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான கட்டை ராஜா என்ற சரவணண் மீது 11 கொலை வழக்குகள் உட்பட 8வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்து வருகிறது.

மத்திய மண்டலத்தில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் ரடிகளின் பட்டியல் தயாரிக்கப்ட்டு அவர்கள் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் துரிதப்படுத்தப்பட்டு அந்த வழக்குகளில் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வழக்கு விசாரணையின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கட்டை ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் சரசு காவல்துறை துணை தலைவர் மற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட்டது.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்கள் முறையாக விசாரணைக்கு ஆஜர் படுத்தப்படவும் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜர் ஆகவும் தேவையான தொடர் நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. இவ்வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்டுள்ள இரு குற்றவாளிகள் மாரியப்பன் மற்றும் மனோகரன் நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்கும் போதே இறந்து விட்டனர். இன்றைய தினம் கொலை வழக்கில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு அளித்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதித்துறை நடுவர் பெஞ்சமின் ஜோசப் பிரபல ரவுடி கட்டை ராஜா என்ற சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான கொலைக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி, முக்கிய குற்றவாளியான கட்டை ராஜாவிற்கு தூக்கு தண்டலையும், மேலும் அவரது கூட்டாளிகளான ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.12,000/ அபராதம் விதித்து முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்.

இந்த கொலை வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த முருகவேல், காவல் ஆய்வாளர், கும்பகோணம் (தற்போது காவல் துணை கண்காணிப்பாளர். வேதாரண்யம் நகை மாவட்டம்) ராமமூர்த்தி, காவல் ஆய்வாளர், கும்பகோணம் தாலுகா காவல் நிலையம் தற்போது திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர்) மற்றும் நீதிமன்ற விசாணையில் தனிக்கவனம் செலுத்தி சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்திய தற்போதைய காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் காயல் துணைக் காண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர்களையும் வழக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் சிறப்பாக நடத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயகுமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் வெகுவாக பாராட்டினார். மத்திய மண்டலத்தில் பிற ரவுடிகள் மீதான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் இது போன்று நீதிமன்றத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர தேவையான அனைத்து தொடர் நடாபடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதுடன் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தொடந்து எடுக்கப்படும் என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO