வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று (12.4.2022) நேரில் ஆய்வு செய்தார். வளநாடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.90 இலட்சம் மதிப்பீட்டில் சிவத்தி குளம் பகுதியில் பெருவாரியான மரக்கன்றுகள் 1400 எண்ணிக்கையில் நடுதல் பணி நடைபெற்று வருவதையும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.4.97960 இலட்சம் மதிப்பீட்டில் நெகிழி மறுசுழற்சி மையம் நடைபெற்று வரும் பணி, நுண் உரம் உற்பத்தி மையம் ரூ.21.55 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்றப் பணிகளையும், மருங்காபுரி ஊராட்சி கொடும்பபட்டியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி (SCPAR ) கீழ் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் கொடும்பபட்டி முதல் நுலுக்கம்பட்டி வரை சாலை மேம்பாடு செய்தல் பணி, 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.8 இலட்சம் மதிப்பீட்டில் கொடும்பபட்டியில் அங்கன்வாடி மையம் அமைத்தல் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15,27 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டிடம் கட்டுதல் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.54 இலட்சம் மதிப்பீட்டில் கொடும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, மருங்காபுரி ஊராட்சி கண்ணுக்குழியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி (SCPAR) கீழ் ரூ.39.00 மதிப்பீட்டில் மகிளிப்பட்டி ஊனைபூர் சாலை முதல் கண்ணுக்குழி வரை சாலை மேம்பாடு செய்தல் பணி நடைபெற்று வருவதையும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம்,

வைரம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் வைரம்பட்டி சித்து குளம் அருகில் பெருவாரியான மரக்கன்றுகள் நடுதல் பணியினையும் மற்றும் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் சித்து குளம் அருகில் உள்ள மரக்கன்றுகளுக்கு இடையில் உறிஞ்சிக்குழி அமைத்தல் பணி நடைபெற்று வரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO