அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று (07.12.2022) தொடங்கி (09.12.2022) வரை நடைபெற்று வருகின்றன. பள்ளி அளவிலும் அதனைத் தொடர்ந்து வட்டார அளவிலும் வெற்றி பெற்ற மாணவப் போட்டியாளர்கள் மாவட்ட அளவிலான இந்த கலைத் திருவிழாப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளின் முதல் நாள் போட்டிகள் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு இன்று (07.12.2022) செயிண்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளி, புனித அன்னாள் மேனிலைப்பள்ளி, பிலோமினாள் மேனிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இசைச் சங்கமம், இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை – தோல்கருவி, துளை காற்றுக்கருவிகள், தந்திக்கருவிகள், நாடகம், மொழித்திறன், நடனம் முதலிய பல்வேறு வகையான போட்டிகளில் 3100 மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து (08.12.2022) அன்று 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆர்.சி மேனிலைப்பள்ளி, செயிண்ட் ஜேம்ஸ் மேனிலைப்பள்ளி மற்றும் வாசவி வித்யாலயா மேனிலைப் பள்ளியிலும்
வருகிற (09.12.2022) அன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிஷப் ஹீபர் மேனிலைப்பள்ளியிலும் பல்வேறு வகையான போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ர.பாலமுரளி தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO