மருத்துவமனையில் திருமாவளவன்

மருத்துவமனையில் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவன், காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரும் 30ம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. நேற்று இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொஹைதீனுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், எவ்வித தொகுதி உடன்பாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகள் கிடைக்குமா என்கின்ற குழுப்பம் நிலவி வரும் சூழ்நிலையில், திருமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்தமுறை விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் அதாவது விழுப்புரம் , சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், திமுக சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என கடுமை காட்டப்பட்டது அதன்பின்னர் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் ரவிக்குமாரை திமுக, சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது.

ஆனால் திருமாவளவன் அவருடைய சொந்த கட்சி சின்னமே இல்லை என்பதால் பானை சின்னத்தில் போட்டியிட்டு 3219 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். அதனால் திமுக தலைமை இம்முறை வேறு மாதிரி யோசிப்பதாக தெரிகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision