திருச்சி அருகே பெயிண்டர் சரமாரியாக வெட்டி கொலை - போலீசார் தீவிர விசாரணை

திருச்சி அருகே பெயிண்டர் சரமாரியாக வெட்டி கொலை - போலீசார் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் பிரபாகரன் (39). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேங்கூர் ராக்கப்ப பெருமாள் கோவில் அருகே தலை நெஞ்சு முதுகு தொண்டை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயத்துடன் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதிக்கு இயற்கை உபாதைக்கு ஒதுங்க சென்ற பெண்கள் பார்த்துவிட்டு திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் உடனடியாக மோப்பநாய் பிரிவு மற்றும் கைரேகை பிரிவு போலீஸ் அடக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை பிரிவை சேர்ந்த ஆல்பர்ட், அச்சுதன், ரவிச்சந்திரன் அடங்கிய குழுவினர் விரைந்து வந்து குற்றவாளிகளின் கைரேகை பதிவு செய்தனர்.

அதேபோல் சம்பவ இடத்திற்கு நிலா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பிரபாகரனின் உடலை திருவெறும்பூர் போலீசார் கை பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் திருவெறும்பூர் போலீசார் விசாரணையில் பிரபாகரன் கொலையானதற்கு காரணம் அந்தப் பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision