திருச்சியில் கூடுதலாக 300ஆக்சிஜன் படுக்கை வசதி விரைவில் பயன்பாட்டிற்கு ஆட்சியர் பேட்டி.
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பு அதிகாரியும், தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளருமான ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஆய்வு பணிகளை திருச்சியில் மேற்கொண்டார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் வருவாய், காவல், சுகாதாரத்துறைகளின் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும், 45வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரி, தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளருமான ரீட்டா ஹரீஸ் தாக்கர் இன்று திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் உறையூர் சாலைரோடு பகுதியில் காய்ச்சல் தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை முகாமினையும், பொதுமக்கள் கூட்டத்தினை தடுக்க பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆய்வுமேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி... நேற்றையதினம் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறி, ஆலோசனைகள் வழங்கியதுடன், பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர திருச்சியில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு தினசரி 6ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இதன்மூலம் விரைவாக நோய் தொற்று கண்டறிந்து அவர்களுக்கான ஆக்சிஜன் தேவை மற்றும் மருத்துவம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுலபமாக உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இருந்த போதும் 400ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதுடன், கூடுதலாக 200படுக்கைகள் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் ஸ்ரீரங்கம், மணப்பாறை மருத்துவமனைகளிலும் சேர்த்து 100ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படுகிறது. நோயாளிகள் பதட்டமடையவேண்டாம், தேவையின்றி மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே இருந்து சிகிச்சைபெறலாம், இல்லாவிட்டால் சிகிச்சை மையங்களில் சேர்ந்து பயன்பெறலாம்.
மாவட்டம முழுவதும் 38 தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 26இடங்கள் மாநகராட்சி பகுதிகளிலும், மீதமுள்ளவை12 புறநகர் பகுதிகளில் உள்ளது. அங்குள்ள மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதற்கு தடைஏற்படுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும் மாநகராட்சி, நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், புறநகர் பகுதிகளைக் காட்டிலும் மாநகராட்சி பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தேவையில்லாதபட்சத்தில் மக்கள் வெளியே வரவேண்டாம், மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
அரசு மருத்துவமனையில் 20கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், தேவைப்படும்பட்சத்தில் ரீசார்ஜ் செய்யவும், ஆக்சிஜன் தேவையினை அதிகரிக்கவும் நடவடிக்கையினை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.
தனியார் மூலமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக இதுவரை புகார் வரவில்லை. அப்படி ஏதும் புகார் வந்தாலும் தகவல் தெரிந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf