திருச்சி - திண்டுக்கல் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி - திண்டுக்கல் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி - திண்டுக்கல் ரெயில் சேவையில் மாற்றம் குறித்து தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் யார்டில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதனால் ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து மாலை 6:10 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் வரை செல்லும் முன் பதிவில்லா ரெயில் (வண்டி எண்- 06499) தாமரைப்பாடி வரை இயங்கும். தாமரைப்பாடியில் இருந்து திண்டுக்கல் வரை அந்த ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரும் முன்பதிவில்லா ரெயில் (வண்டி எண் 06498) திண்டுக்கல்லில் இருந்து தாமரைப்பாடி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தாமரைப்பாடியில் இருந்துகாலை 6:26 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்து சேரும்.

இந்த மாற்றம் வருகிற (20.10.20223)-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision