காவிரி நீரை மலர்கள், விதை நெல் மணிகளை  தூவி முக்கொம்பில் வரவேற்ற திருச்சி விவசாயிகள்

காவிரி நீரை மலர்கள், விதை நெல் மணிகளை  தூவி  முக்கொம்பில்  வரவேற்ற திருச்சி விவசாயிகள்

குறுவை சாகுபடிக்காக கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை முதலமைச்சர் திறந்து வைத்தார். அந்த நீர் இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வந்தடைந்தது. அந்த நீரை வரவேற்கும் விதமாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்கள், விதை நெல் மணிகளை  தூவியும் அதனை வரவேற்றனர். 

இந்த நீரானது இன்று (27.05.2022) மாலை கல்லணைக்கு செல்லும். பின்னர் கல்லணையிலிருந்து 5 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கலுக்கு பாசனத்திற்காக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது... தண்ணீர் திறப்பில் அரசு முறையாக திட்டமிடவில்லை, தண்ணீர் வரத்தும் வேகமும் தற்போது குறைந்துள்ளது. அதேநேரம் விவசாயிகளும் தற்போது விவசாய பாசன பணியை தொடங்கி உள்ளன.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான இடர்பாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமாக 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் 20ம்தேதி கடைமடையை சென்றடையும், அதற்கான சூழல் தற்போது இல்லை. 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு 5 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடைமடையை சென்றடைய நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு  மேற்கொள்ள வேண்டும்.

முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரும் பணியை அரசு அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் எனவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும், மேலும் ஆட்சியர் உரம் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என்று ஆட்சியர் கூறியுள்ள நிலையில் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO