ஓய்விலும் மக்களுக்காகவே உழைக்கும் முதல்வர்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி
திருச்சி தெற்கு மாவட்ட கழக ஆவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களது 99 வது பிறந்த தின விழா மற்றும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொட்டப்பட்டு இந்திராநகரில் நடந்தது. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சிறப்புரையில் பேசியதாவது.,
""கழக தலைவர் அறிவிக்கும் எந்தவொரு அறிவிப்பையுமே முனைப்புடன் நிறைவேற்றிக் காட்டுகிறது திருச்சி தெற்கு மாவட்ட கழகம். தமிழக முதல்வர் தற்போது சிறு ஓய்விலிக்கும் நிலையிலும்கூட போனில் ஒவ்வொரு அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டபணிகள் குறித்து விசாரித்தபடியே உள்ளார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ஓய்வெடுங்கள் என்று நாங்கள் கூறினாலும் அதனை ஏற்காமல் மக்களைப் பற்றியே சிந்தித்து ஓய்விலும் மக்கள் பணியாற்றும் மக்களின் முதல்வரைப் பெற்றுள்ளோம். அவர் இரண்டொரு நாட்களில் வந்துவிடுவார் என்றாலும்கூட மக்களைப் பற்றியே சிந்தித்தபடி விசாரித்தபடியே உள்ளார். எங்கள் மீது முழுநம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த உங்களுக்காக நன்றி மறவாமல் உழைப்போம்.
கடந்த 10 வருடங்கள் அப்படி இல்லாத ஆட்சி நடந்ததைத் தற்போது இந்த மேடையில் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனை மக்களே அறிவார்கள். ஆனால் கழக தலைவரும், தமிழக முதல்வருமான தளபதி உத்தரவின்படி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஓடிக் கொண்டிருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இல்லம் தேடிக்கல்வித் திட்டமானாலும், மருத்துவதுறையின்கீழ் மக்களைத் தேடி மருத்துவ திட்டமானாலும் ஒவ்வொரு திட்டத்தையுமே பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர். இன்றைக்கு இருந்த இடத்திலிருந்தே திட்டங்களை நிறைவேற்ற நவீன டிஜிட்டல் முறை இருப்பினும்கூட மக்களைத் தேடியே ஒவ்வொரு திட்டத்தையுமே செயல்படுத்தும் அவரது கடும் உழைப்பால்தான் நெ. 1 முதலமைச்சராக மாண்புமிகு தளபதி சரித்திரம் படைத்து வருகிறார்.
திருவண்ணாமலையில் 2 லட்சமாவது முகாமைத் துவக்கி வைக்க சென்றபோது அவர் தங்கும் விடுதிவரை வழிநெடுகிலும் இரண்டு பக்கங்களிலும் மனுக்களுடன் நின்ற மக்களின் அருகிலேயே சென்று மனுக்களைப் பெற்றார் முதல்வர். நமது கோரிக்கைகளை உங்களில் ஒருவராக திகழும் முதல்வர் நிறைவேற்றிடுவார் என்ற நம்பிக்கையையே மக்களிடம் காண முடிந்தது. இப்படி மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தும் கழக அரசின் ஓராண்டு சாதனைகளை இத்தெரு முனைப் பிரசார கூட்டங்கள் வாயிலாக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. பொதுக்கூட்டங்கள், மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறையின் மிக பெரிய பாசறை கூட்டங்களையும் நடத்தி காட்டியுள்ளோம்"" - என்று பேசினார்.
இக்கூட்டத்தில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருதயராஜ் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் ஆவின் தொமுச செயலாளர் பாண்டியன் கலைஞர் நகர் பகுதி கழகச் செயலாளர் மணிவேல்,வட்டக் கழக செயலாளர் மாரிமுத்து மனோகரன் இக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ரம்யா பேகம் நன்றியுரை குணசேகரன் கூட்ட ஏற்பாடு திருச்சி மாவட்ட ஆவின் தொழிலாளர் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்டம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO