திருச்சி மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்த 39 பேருக்கு பாராட்டு விழா

திருச்சி மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்த 39 பேருக்கு பாராட்டு விழா

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி (Unblemished Service) மற்றும் தமிழ்நாடு காவல் துறையை சார்ந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழ்நாடு காவல் நூற்றாண்டு (2018-2019) ஆண்டிற்கான உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது இன்று (17.07.2021) திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 1030 மணியளவில் நடைபெற்றது. 

இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் 
ஒழுங்கு தலைமையேற்று 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக பணி புரிந்த காவல் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் 39 காவல் ஆளினர்களுக்கு தமிழக அரசு 
வழங்கும் ரூபாய் 2000 பண வெகுமதி அவர்களது வங்கி கணக்கில்
செலுத்தப்பட்டுள்ளது.

காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழ்நாடு காவல் நூற்றாண்டு (2019-2020) ஆண்டிற்கான உயர் கல்வி உதவித்தொகை காசோலை வழங்கப்பட்டது. இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்களை பாராட்டினார்கள்.

அதன்பிறகு மாநகரில் பணிபுரியும் 35 பெண்காவலர்களுக்கு பிரத்தியேகமாக
Health and Hygiene தொண்டு நிறுவனம் பெண்களுக்கான Napkin Pad மற்றும் Menstrual cups வழங்கி பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், மார்பக புற்றுநோய் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாமானது நடத்தப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH