துறையூர் அருகே ஏரியில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஏரியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக திருச்சி புவியியல் சுரங்கத் துறை உதவி இயக்குனர் பாலமுருகன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் இன்று அதிகாலை அப்பகுதியில் புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த லாரியை சோதனை செய்த போது லாரியில் அரசு அனுமதி இன்றி மணல் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.
லாரி மற்றும் ஓட்டுநரை புவியியல் சுரங்கத் துறை அதிகாரிகள் துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் லாரி ஓட்டுநர் சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பதும், லாரியின் உரிமையாளர் அம்மாபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று யூனிட் கிராவல் மணலுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனர் செல்வக்குமாரை கைது செய்தனர். லாரியின் உரிமையாளர் ரவிச்சந்திரனை வலை வீசி தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision