ரயில் பயணியிடம் செல்போன் பறித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

ரயில் பயணியிடம் செல்போன் பறித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

கடந்த (06.12.2023)-ந் தேதி திருச்சி இரயில்வே சந்திப்பில் தொடர் வண்டிக்காக காத்திருந்த பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டியும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பீமநகரை சேர்ந்த சைமன் கிஷோர் @ கில்லர் (21), த.பெ.ஜான் லூயிஸ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிரி சைமன் கிஷோர் @ கில்லர் என்பவர் மீது திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பொதுமக்களின் உடைமைகளை திருடியதாக ஒரு வழக்கும், திருச்சி மாநகர எல்லையான பாலக்கரை காவல்நிலையத்தில் திருட்டு, வழிப்பறி என 5 வழக்குகளும், திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், தில்லைநகர் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கு உட்பட 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி சைமன் கிஷோர் @ கில்லர் என்பவர் தொடர்ந்து, இரயில் பயணிகளிடம் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி இருப்பு பாதை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து,

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision