திருச்சியில் 2023ம் ஆண்டு 10% அதிகமான விபத்துகள் - காவல் ஆணையர் பேட்டி.

திருச்சியில் 2023ம் ஆண்டு 10% அதிகமான விபத்துகள் - காவல் ஆணையர் பேட்டி.

35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா திருச்சியில் இன்று முதல் 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகர காவல ஆணையர் காமினி..... திருச்சி மாநகர பகுதிகளில் விபத்துகளை குறைக்க காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது அந்த பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி விபத்துகளை தடுப்பது காவல்துறையின் நோக்கம் என்றார்.

திருச்சி மாநகரில் சென்ற வருடம் 158 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது அதில் 165 பேர் உயிரிழந்துள்ளார்கள் இதன் மூலம் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டு 10% அதிகமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக அதிக விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் அதி வேகமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் இருப்பினும் அதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக மாணவர்கள் பின்பற்றி விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision