தங்கம் கடத்தலுக்கு உதவிய சுங்கத்துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்

தங்கம் கடத்தலுக்கு உதவிய சுங்கத்துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய விமானங்களின் சேவை தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட ஒரு சில விமான சேவைகள் மட்டும் மத்திய அரசு அனுமதியோடு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திருச்சி வரக்கூடிய பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் கடந்த வாரம் சார்ஜா, துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கோவை மற்றும் மதுரையிலிருந்து வந்த அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 1.13 கோடி மதிப்பிலான 2275 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வருவதற்கு ஆய்வாளர் அசோக் உறுதுணையாக இருந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக முன்பாக விமான நிலையத்தில் பணி ஏற்றார்.

தொடர்ந்து இவர் மீது தங்கம் கடத்தலில் தொடர்பிருந்ததையடுத்து மத்திய சுங்கத்துறை ஆணையர் அணில் பணியிடை நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn