திருச்சி அருகே குப்பையில் வீசப்பட்ட ஒரிஜினல் ஆதார் அட்டைகள் - காவல்துறை கைப்பற்றி விசாரணை

திருச்சி அருகே குப்பையில் வீசப்பட்ட ஒரிஜினல் ஆதார் அட்டைகள் - காவல்துறை கைப்பற்றி விசாரணை

மத்திய, மாநில அரசு தனி மனித அடையாளமாக ஆதார் கார்டை பயன்படுத்தி வருகிறது. தற்பொழுது எந்த ஒரு சான்றிதழ் பெறுவதற்காகவும் வேலைக்கு செல்வதற்கும், லோன், உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது. ஏற்கனவே ஆதார் கார்டில் உள்ள தரவுகள் மூலமாக தனி மனிதனின் ரகசியங்கள் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொறு மனிதனின் வாழ்விலும் ஆதார் கார்டு தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இப்படி முக்கியத்துவம் நிறைந்த ஆதார் கார்டுகளை திருச்சி திருவெறும்பூர் இரயில் நிலையம் செல்லும் பகுதியில் மர்ம நபர்கள் ஒரு மூட்டையில் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆதார் கார்டுகளை குப்பையில் வீசி சென்று உள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ஆதார் கார்டுகளை கைப்பற்றி அதில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் மூலம் ஆதார் கார்டுகளை யார் வீசி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் ஒரிஜினல் மற்றும் நகல் ஆதார் கார்டுகளை ஒரு மூட்டை நிறைய சாக்கில் கட்டி கொண்டு வந்து மர்ம நபர்கள் வீசி சென்று உள்ள சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision