மாணவர் தலைவர் பதவியேற்பு விழா

மாணவர் தலைவர் பதவியேற்பு விழா

திருச்சி ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புஷ்கரம் வேளாண்மை கல்லூரி டீன் Dr.சிவராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் மாணவர்களின் தலைமை பண்பு குறித்தும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் பேசினார். விழாவில் பள்ளியின் தலைவர் கோபிநாதன், துணை தலைவர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குனர் வரதராசன், கல்வி ஆலோசகர் மலர்விழி, முதல்வர் நளினி, துணை முதல்வர் ஆரோக்கிய ரீனா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிர்வாகத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision