பொருட்களை தொடவோ, திறக்கவோ, தூக்கி எறியவோ கூடாது - திருச்சி ரயில்வே எஸ் பி செந்தில்குமார் பேட்டி

பொருட்களை தொடவோ, திறக்கவோ, தூக்கி எறியவோ கூடாது - திருச்சி ரயில்வே எஸ் பி செந்தில்குமார் பேட்டி

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நாளை மறுநாள் (15.08.2023) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சோதனை நடத்தினர். பின்னர் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது.. 

ரயில் நிலைய சுற்றுப்புறங்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு குற்றங்கள் மற்றும் நாச வேலைகளை தடுக்கும் விதமாகவும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகிறார்கள். 

ரயிலில் வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்த பிறகு ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். ரயில் பெட்டிகளிலோ அல்லது ரயில் நிலைய நடை மேடைகளிலோ உரிமை கோரப்படாத பொருட்கள் ஏதாவது இருந்தால் தொடவோ, திறக்கவோ மற்றும் தூக்கி எறியவோ கூடாது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

ரயில் நிலையத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வருடத்தில் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்களில் 1200 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் டயர் மற்றும் கல் வைப்பது போன்ற நிகழ்வுகள் நாச வேலை காரணம் அல்ல. உள்ளூர் பிரச்சனை காரணமாக இது போன்ற செயல்கள் செய்யப்படுகிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில் நிலையங்களில் 120 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தேக நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision