திருச்சியில் ஆஸ்கார் லயன்ஸ் சங்கம் தொடக்கம்

திருச்சியில் ஆஸ்கார் லயன்ஸ் சங்கம் தொடக்கம்

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிச்சாண்டார்கோவில் ஆஸ்கார் லயன்ஸ் சங்கம் என்ற புதிய சங்க துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மண்ணச்சநல்லூர் லயன்ஸ் சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மண்ணச்சநல்லூர் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் நாகராஜ் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் லயன்ஸ் சங்க திருச்சி மாவட்ட ஆளுநர் இமயவரம்பன் கலந்துகொண்டு ஆஸ்கார் லயன்ஸ் சங்கத்தை தொடங்கி வைத்தார். பிச்சாண்டார்கோவில் ஆஸ்கார் லயன்ஸ் சங்க சாசனத்தலைவராக வி.பி.தங்கமணி, சாசன செயலாளராக என்ஜினீயர் ஜெயகுமார், சாசன பொருளாளராக சண்முகா வடிவேலு, நிர்வாக அலுவலராக ஆறுமுகம் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மேலும் சங்கத்தில் கூத்தூர் செந்தில், பிச்சாண்டார்கோவில் விஜயகுமார், மண்ணச்சநல்லூர் கார்த்திகேயன், அத்தாணி மதியழகன், வி.பி முருகேசன் உள்பட 42 உறுப்பினர்கள் இந்த சங்கத்தில் இணைந்தனர். லயன்ஸ் சங்க திருச்சி மாவட்ட துணை ஆளுநர் சவரிராஜ் புதிய பொறுபேற்ற புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தினார்.

லயன்ஸ் சங்க மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் மணிவண்ணன் புதிய உறுப்பினர்களை இணைத்தார். மற்றும் ராஜாராம் சேவை திட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் இறுதியாக பிச்சாண்டார்கோவில் ஆஸ்கார் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் வி.பி‌. தங்கமணி நன்றி தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision