திருச்சியில் பெண்கள் பாதுகாப்பு செயலி குறித்த மாரத்தான் ஓட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி பற்றிய விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது இம்மினி மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி நா. காமினி அவர்கள் டிவிஎஸ் டோல்கேட்டில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மினி மாரத்தான் ஓட்டமானது டிவிஎஸ் டோல்கேட் துவங்கி தலைமை தபால் நிலையம் முத்தரையர் சிலை கண்ட்ரோல்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் எம்ஜிஆர் ரவுண்டானா வழியாக ஸ்டூடண்ட் ரோட்டில் முடிவுற்றது மேலும் இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மகளிர் 181 என்ற எண் உள்ளது என்றும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களுக்கு உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும்.
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த ஓட்டத்தின் நோக்கம் என்றும் இந்த ஓட்டத்தில் பங்கு பெற்றுள்ள அனைவருக்கும் மகளிர் உதவி எண் 181 அனைத்து பெண் குழந்தைகள் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறி அறிவுறுத்தி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். ஓட்டத்தில் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் பெண் ஊர்க்காவலர் படையினர் மற்றும் ஹோலி கிராஸ் பிஷப் கீப்பர் ஈவேரா கல்லூரி காவேரி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் பயிலும் மாணவிகள் என சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டனர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி நா. காமினி அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு காவல் ஆணையர் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision