கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
திருச்சி Metaspace solutions மற்றும் arrant நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சி தில்லைநகரில் ஞாயிறன்று நடைப்பெற்றது. இதில் காவிரி கல்லூரி, SRC கல்லூரி, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது "வெற்றியை உருவாக்குதல்" என்ற கருப்பொருளுடன் 10 தலைப்புகளில் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
டாக்டர்.பி.அனுஷா CEO- Metaspace Solutions Pvt Ltd, ஸ்ரீதேவிகா அழகுக்கலை கல்வியாளர்ரைஸ் & சன்ரைஸ் பியூட்டி அகாடமி-தில்லைநகர், பி.சேதுமாதவன் - நாவலாசிரியர், ஷெர்லி-மனித வளப்பணியாளர், டாக்டர்.வி.சாவித்திரி- கல்வியாளர் டாக்டர்.எஸ்.பிரேமானந்த்- பயிற்சியாளர் ஆகியோர் இந்த பயிற்சியினை வழங்கினர். இந்த திட்டத்தின் நோக்கம் மாணவர்களின் மென்திறன்களை ஊக்குவித்து வலுப்படுத்துவதும் அவர்களின் வாழ்வில் வெற்றி பெற உதவும் வகையில் நடைபெற்றது. பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO