திருச்சியில் மீண்டும் மீண்டும் அகற்றப்படும் பிரியாணி கடைகள் - ரகளையிலும் ருசித்து சாப்பிட்ட பிரியாணி பிரியர்கள்

திருச்சியில் மீண்டும் மீண்டும் அகற்றப்படும் பிரியாணி கடைகள் - ரகளையிலும் ருசித்து சாப்பிட்ட பிரியாணி பிரியர்கள்

திருச்சி மாநகர் பகுதிகளில் சமீப காலமாக புற்று ஈசல் போல் பிரியாணி கடைகள் முளைத்து விட்டன. பாரதிதாசன் சாலை, திருச்சி மத்திய பேருந்து நிலையம்,ரயில் நிலையம் செல்லக்கூடிய சாலைகளில் ஏராளமான வெவ்வேறு விதமான பெயர்களில் பிரியாணி கடைகள் வந்துவிட்டது.

திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை இதுபோன்று சாலை ஓரமாக உள்ள பிரியாணி கடைகள் மற்றும் மற்ற கடைகளை அகற்றி வருகின்றனர். மீண்டும் மீண்டும் அகற்றப்படுவதன் காரணம் ஏன் என அதிகாரிகள் கேட்ட பொழுது.... இந்த கடைகளுக்கு முறையான அனுமதி கிடையாது என்ற தகவல் மட்டும் வருகிறது.

மேலும் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு விபத்துகளை ஏற்படுத்துவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். இதே போல் நேற்றிரவு அதிரடியாக 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மாநகராட்சி லாரிகளை வைத்து குப்பையை அள்ளுவது போல் கடைகளை அள்ளி சென்றனர். திருச்சி கஸ்டம்ஸ் அலுவலகம் அருகே ஒரு கடையில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அதிரடியாக பிரியாணி அண்டாவை அள்ள சென்ற பொழுது அவர்கள் அதை உள்ளே எடுத்து வைத்து கொண்டனர். அப்பொழுது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் கேஷ்வலாக பிரியாணியை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும் தொடர்ந்து மற்ற கடைகளை அகற்ற சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision